உருப்படியாக ஒரு நிகழ்ச்சி.
அது மக்கள் செல்வன் விஜயசேதுபதி நடத்துகிற நிகழ்ச்சிதான்.!
அவரது ஆசிரியை கமலா டீச்சரின் கால்களில் விழுந்து வணங்கி தானும் ஒரு மனிதன்தான் என்பதை உணர்த்தினார், நடிப்பு என்பது அவரது தொழில் மட்டுமே. தனக்கு தலையில் கிரீடம் எதுவுமில்லை என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் பேச்சிலும் நிரூபித்தபடியே இருந்தார்,
“நான் படிப்பில் பிலோ ஆவரேஜ்தான்!
நடிகனாகணும்னு ஆசைப்பட்டதில்ல. ஆனா கற்பனையில அப்படி நினைச்சுக்குவேன்.
கஷ்டம்.கடன்.அழுத்தியது.தெறிச்சி ஓடுறதா,எதிர்த்து நிற்பதா?ஓட நினைக்கல.எதிர்த்துதான் நின்னேன். என் கற்பனைதான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்ததா டீச்சர் சொல்றாங்க.அவங்களுக்கு கோடி வணக்கம்.” என்கிறார் மக்கள்செல்வன்.