உடன்பிறப்பின் நிக்காஹ் நிகழ்ச்சிக்கு வந்த எஸ்.டி.ஆர். அடுத்த சிலநாட்களில் வெளிநாட்டுக்கு சென்று விட்டார். உடலை மேலும் இளைக்க செய்ய வேண்டுமாம். அதன்பின்னர்தான் மாநாடு படம் தொடங்கும் என்று தெரிகிறது.அந்த படத்துக்குப் பின்னர்தான் மற்ற படங்களை கவனிப்பார் என சொல்கிறார்கள்.
தொடர்ந்து இரண்டு பெரிய பிளாப்புகளை கொடுத்து விட்டு இரண்டு பேருக்கு கதை பண்ணி வைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி.!
ஒருவர் சூர்யா
மற்றவர் சிம்பு.
சூர்யா உடனடியாக ஹரிக்கு படம் பண்ணுகிற அவசரத்தில் இல்லை.சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் முடித்து விட்டுத்தான் அடுத்தவருக்கு படம் பண்ணுவார் என்கிறார்கள்.
எஸ்.டி.ஆர்.-கவுதம் கார்த்திக் இருவரையும் இணைத்து படம் பண்ணுகிற திட்டத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
வெளிநாட்டில் இருந்து எஸ்.டி.ஆர் திரும்பிய பின்னர்தான் முழு விவரம் தெரியவரும்.