தமிழக பாஜக சவுக்கிதார்களில் ஒருவரான டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் அந்த கட்சியில் இருந்து திடீரென வெளியேறி விட்டார்,
அவருக்கும் மாநிலத் தலைவி தமிழிசைக்கும் தொடக்கத்தில் இருந்தே ஓட்டும் இல்லை உறவும் இல்லை என்பது மாதிரியே இருந்தனர். ஜால்ரா போடுகிறவர்களுக்குத்தன் கட்சியில்முக்கியத்துவம் என்று முன்னரே புலம்பியபடிதான் இருந்தார் காயத்ரி.
இப்பது ஒட்டு மொத்தமாக சவுக்கிதாரை தூக்கி கடாசி விட்டார்.
ரத்தக்கொதிப்பு.
“ஆட்சியைப் பிடிப்பதற்கான விளையாட்டைப்பார்த்து ரத்தக் கொதிப்புதான்அதிகமாகுது. அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து போனது.மற்றவர்களை குற்றம் சொல்வதே வேலையாகிப் போச்சு.சின்னப்பிள்ளைகள் மாதிரி சண்டை போடுகிறார்கள். வழி நடத்திச்செல்ல முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை.
தலை எழுத்து மாறப்போவதில்லை.
நாமா இந்தியாவை மாற்றப் போகிறோம்? நாமா இந்தியாவின் முகத்தை மாற்றப்போகிறோம்,நாமா தலை எழுத்தை மாற்றப்போகிறோம்?எனக்கு அரசியல் ஆர்வம் இல்லாமல் போச்சு.
அரசியலில் நடிக்கிறார்கள்.
சினிமாவை விட அரசியலில்தான் நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.பொய்யாக போராடுகிறார்கள்,பொய்யான தொண்டர்கள்,பொய்யான மெம்பர்கள்.அவர்களில் நானும் ஒரு ஆளாக இருக்க விரும்பவில்லை “என்பதாக காயத்ரி கூறி இருக்கிறார்.