பாயும் புலி படம் வெளியான கையோடு தனது சொந்தப் பட வேலையைத் தொடங்கிவிட்டார் விஷால். விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் பாண்டிராஜ். உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு கதகளி என்று தலைப்பிட்டுள்ளனர். மெட்ராஸ் படத்தில் நாயகியாக நடித்த கேத்ரின் தெரசா , விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இதில், விஷால் – கேத்ரின் தெரசா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க,. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை விஷாலுடன் இணைந்து தயாரிக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.