அஜித்தின் வீரம்,விஜய்யின் பைரவா உள்ளிட்ட படங்களை தயாரித்த விஜயா புரோடக்ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.
கதாநாகியாக ராஷி கண்ணா நடிக்க,முக்கிய வேடத்தில்,நிவேதா பெத்துராஜே நடிக்கிறார். இப்படத்தை விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை,வேல்ராஜ் கவனிக்க, விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர்.
கலை இயக்கம் எம்..பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன்கே.எல். மேற்கொள்கிறார்.
சங்கத்தமிழன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது.