பாராளுமன்றத் தேர்தலில் ஒத்த ஆளாய் டார்ச் லைட்டுடன் களமிறங்கி, திராவிடக் கட்சிகளுக்கே ‘திடீர்’ திகிலாய் காட்சியளிக்கும் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனை இந்திய அரசியல் கட்சிகளே, தற்போது உற்று நோக்கத் தொடங்கியுள்ளன.
வரும் மே மாதம் 23- ம் தேதி வெளியாகும் வாக்கு எண்ணிக்கையில், கமல் பெறும் வாக்கு சதவீதம் இனி வருங் கால தேர்தல்களில் கமலையும் கூட்டணி சேர்க்க தமிழக கட்சிகள் ஆர்வம் காட்டும் என்பதை மறுப்பதற்கில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இந்நிலையில் இன்று நடிகரும் இயக்குனருமான ஆர்.பார்த்திபன் கமலை 1 மணி நேரம் தனியே சந்தித்து பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பு, தற்போது கமல் கட்சியில் நடிகர் பார்த்திபனும் இணையலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொருதரப்போ அதெல்லாமில்லீங்க பார்த்திபன் இயக்கி வரும் ‘ஒத்த செருப்பு’ இசை வெளியீட்டு விழாவிற்கு விடுத்த அழைப்பாக இருக்கலாம் என்கிறது.நடிகர் பார்த்திபன் எப்போதும் தான் சொல்ல நினைப்பதை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லி விடுவதில் கில்லாடி.
இந்நிலையில்,கமலுடனான இச் சந்திப்பு குறித்து இயக்குனர் பார்த்திபன் வழக்கமான குறும்புடன்,தனது சமூக வலைதளபக்கத்தில், கமலுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, ‘கமல் என்ற நூலகத்தில் நானும் ஒரு நூலாய்’ என்றும்,கமலின் பிறந்த நாளான 7 ம் தேதியை குறிக்கும் வகையில்,”ஒத்த செருப்பு size 7′. 7- என்றால் ஒத்தப்படை… ஒருவனே படையாய்! என்றும் பதிவிட்டுள்ளார்.
கமலின் நூலகத்தில் நானொரு நூலாய் என பதிவிட்டிருந்தால் உலகநாயகனின் லைப்ரரியில் இவரது ஒத்த செருப்பும் இடம் பெற்றதை குறிப்பிடுவதாக பொருள் கொள்ள முடியும்.
ஆனால் ஒருவனே படையாய் என சொன்ன பார்த்தீபன் கமல் என்ற நூலகத்தில் என சொல்வதால் அவரது கட்சியை குறிப்பிடுவதாகவே கருத முடியும்.
வார்த்தைகளில் சித்து வேலை காட்டுகிறவர் பார்த்தீபன் .
#os7
"ஒத்த செருப்பு size 7'
7- என்றால் ஒத்தப்படை…
ஒருவனே படையாய்! pic.twitter.com/DgptMNA66f— R.Parthiban (@rparthiepan) May 7, 2019