தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது அரசின் கைக்குள்.!
தலைவராக இருந்த விஷாலை அரசு அதிரடியாக அலேக் பண்ணி வீசி விட்டது. விஷாலுக்கு எதிராக இருந்த அணியினர் முதல்வர் எடப்பாடியாரைப் பார்த்து ஊழல் மனு கொடுத்ததின் விளைவு மின்னல் வேகத்தில் சங்க நிர்வாகத்தை விரட்டி விட்டது. இந்த விஷயத்தில் அக்கறையுடன் நடவடிக்கை எடுப்பதற்கு காரணம் பாஜகவும் ஒரு காரணம் என்கிறார்கள்.
பாஜக தலைமையை சேர்ந்த ஒருவர் திரை உலகில் காலடி வைத்திருக்கிறாராம். பைனான்ஸ்,விநியோகம் என இறங்கி இருக்கிற அவர் கொடுத்த பிரஷர்தான் விஷாலை விரட்டி இருக்கிறது என்கிறார்கள்.
இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வாகிக்க ஒன்பது பேர் கொண்ட குழுவை அரசு நியமித்திருக்கிறது.
அந்த குழுவின் விவரம்.