இசைஞானியுடன் இளைய நிலா இணைந்து பாடுவதில்லை என்பது உலகறிந்த விஷயம்.
அண்மையில் சென்னையில் திரை உலகத்தினர் சேர்ந்து நடத்திய இசைவிழாவிலேயே பலவேறு முயற்சிகள் நடந்தும் அது நடக்கவில்லை.
“எனது பாடல்களை பாலு பாடுவதாக இருந்தால் பணம் கட்டியாக வேண்டும் என்பதில்” இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதில் பாலு மனம் நொந்து அவரது பாடல்களை பாடுவதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக இருவரும் பேசிக்கொள்வதும் இல்லை.
இந்த நிலையில் தான் ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிற விழாவில் ராஜாவுடன் பாலுவும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தப்போகிறார்கள் என்பதாக ஒரு தகவல் ஊர் சுற்றியது.
விசாரித்ததில் இதுவரை அந்த இரு லெஜண்ட்ஸ் களும் ஒன்றாக மேடை ஏறுவது பற்றி முடிவே எடுக்கவில்லை என்கிறார்கள்.
“ராஜாஎன்னிடம் பேசட்டும்” என்கிறார் பாலு.
“பாலு என்னிடம் பேசட்டும்” என்கிறார் ஞானி.