படத்தின் தலைப்பே பாமர மக்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது.!
“அந்தாளு ஏதாவது வித்தியாசமா பண்ணுவான்யா… குடைக்குள் மழைய கொண்டாந்த ஆளாச்சே” என விடலைகள் பேசுகிறார்கள்.
அப்படி என்ன வித்தியாசம்?
இந்தியாவிலேயே எவருக்கும் இல்லாத துணிச்சல், அட கமலுக்கே இல்லிங்க,!உலகத்தில் 12 பேர் மட்டுமே முயன்று பார்த்திருக்கிறார்கள் என்றாலும் பார்த்தீபன் மாதிரி இல்லைன்னு எந்த சாமி தலை மேலேயும் ஓங்கி அடிச்சு சத்தியம் பண்ணத் தயார்.
நம்ம ரஜினி,அஜித், விஜய்சேதுபதி,விஜய், இவங்கல்லாம் பண்ண முடியாத பெரிய ஓவியப்படமா?
ஆமாங்க. பெரிய ஓவியப்படம்தான்.அவங்களுக்கெல்லாம் நயன் திரிஷா இம்மாதிரி ஜோடி வேணும்.அடிச்சு மிதிக்க எதிரிகள் வேணும்.ஆனா இந்த படத்தில பார்த்திபனைத் தவிர வேற ஆள் யாருமே இல்லை.ஆனா கேரக்டர்ஸ் நிறைய!புரியலியா பார்த்திபனை கேட்ருவோம்.
“சோலோ ஆர்ட்டிஸ்ட் பண்ணின படங்கள் 12.ஆனா கதை வசனம் எழுதி,டைரக்ட் பண்ணி நடிச்சு தயாரித்த வகையில் நான்தான் உலகத்திலேயே முத ஆளு.
படம் 2 மணி நேரம் ஓடுது..நான் மட்டும்தான் நடிச்சிருக்கேன். ஆனா படம் ஹிலாரியஸ் !அதிலும் செகன்ட் ஆப் பிரமாதமாக வந்திருப்பதாக கேமராமேன் திரு ரொம்பவே பாராட்டினார்.இந்த படத்துக்கு கேமரா ராம்ஜி. இந்த படத்தின் முன்னோட்ட விழாவை கமல்சார்தான் தொடங்கி வைக்கிறார். அன்னிக்கி நெறைய மேட்டர் சொல்லப் போறேன்”என்றார் ரா.பார்த்தீபன்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஒரே ஆளை நடிக்கவைத்து ஓரங்க நாடகம் நடத்தியிருக்கிறார் .அந்த நாடகத்தின் பெயர் Is it where to happen. இந்த நாடகம் அந்த காலத்தில் மியூசியம் தியேட்டரில் நடந்தது. அப்போதெல்லாம் தியேட்டர் வாடகை 70 ரூபா. பாலசந்தரின் நெருங்கிய நண்பர் நட்டி நடராஜ் 20 ரூபா,பாலசந்தர் 20ரூபாஇப்படி இன்னும் பல நண்பர்கள் பங்கிட்டு கொள்வார்களாம்.
இந்த தகவலை சொன்னது காலமெல்லாம் கே.பி.சாருடன் இருந்த உதவியாளர் மோகன்.