தாரை தப்பட்டைபடப்பிடிப்பு முடிவடை ந்ததை அடுத்து,சசிகுமார் தன் புதிய பட வேலைகளை தொடங்கியுள்ளார் ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக ரவிந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை வசந்தமணி இயக்குகிறார். வெற்றிவேல் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக புதுமுக நாயகி ஒருவர் நடிக்கிறார். இவர்களுடன், பிரபு, தம்பி ராமையா, ரேணுகா, விஜீ மற்றும் பலர் நடிக்கின்றனர். டி இமான் படத்திற்கு இசையமைக்க, எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். தஞ்சாவூரில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது