எழுத்து இயக்கம்; காளீஸ், ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமனுஜம் , இசை: விஷால் சந்திரசேகர்,
ஜீவா, நிக்கி கல்ரானி ,அனைகா,ஆர்.ஜே.பாலாஜி ,சுகாசினிமணிரத்னம்,ராஜேந்திரபிரசாத்
கோவிந்த் பத்மசூரியா
**************************
பாட்ஷா எனும் ஹாக் வைரசை கண்டுபிடித்து அதன் வழியாக பிறரது ரகசியங்களை தெரிந்து கொள்வதில் ஜீவாவுக்கு ஆனந்தம். அடுத்தவரை கொலை செய்ய யாரையோ செல்போன் வழியாக மெஸ்மரைஸ் பண்ணுவது கோவிந்த்பத்மசூரியாவின் தொழிலாகவே இருக்கிறது.
அதாவது செல்போனின் தீமைகளை வன்முறையோடு சொல்ல முற்பட்டிருக்கிறார்கள். இதனுடன் காதல்,காமடி என கலந்து பார்வையாளர்களை பரவசப் படுத்தப் பார்க்கிறார்கள். செல்போன் கில்லாடிகளான ஜீவாவும் கோவிந்த பத்மசூரியாவும் மோதிக் கொள்வதுதான் மெயின் கதை. இதில் யார் யாரோ பலியாகிறார்கள்.
அதில் நாமும்வதை படுகிறோம் என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.
கம்ப்யூட்டர்.செல்போன்களின் ஆபத்துகளை சொல்வதற்கு இயக்குநர் காளீஸ் ஆசைப்பட்டிருக்கிறார்.அதற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் யுத்திகள் பெரிதும் உதவி செய்திருக்கிறது. இவ்வளவுதான் சொல்ல முடியும்.
ஜீவா-நிக்கி கல்ராணி காதல் ,ஜீவாவின் பைட் என கதைக்கு வலுவூட்டப் பார்த்திருக்கிறார்கள்.அபினந்தனின் ஒளிப்பதிவு கை கொடுத்திருக்கிறது.
காமடிக்கு ஆர்.ஜே.பாலாஜி .போதும்டா சாமி என்றிருக்கிறது.
சினிமா முரசத்தின் மார்க்.1.5/ 5