2012 ம்ஆண்டு வெளியான சாட்டை திரைப்படத்தில் ஆசிரியராக நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்ற இயக்குனர் சமுத்திரகனி தொடர்ந்து தற்போது கை நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.. இந்நிலையில் மீண்டும் சாட்டை 2 படத்தின் மூலம் இயக்கத்துக்கு திரும்புகிறார் .இது குறித்து சமுத்திரக்கனி.கூறுகையில், “நான் நடித்து இயக்கி வந்த ‘கிட்னா’ திரைப்படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன். என்னுடன் நடித்து வந்த தன்ஷிகாவிற்கு தற்போது கபாலி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் என்னிடம் கேட்டுக் கொண்டதால் கிட்னா படத்தை தற்போது தள்ளி வைத்திருக்கிறேன். மேலும் சாட்டை படத்தின் 2ம் பாகத்தை விரைவில் இயக்கப் போகிறேன். முதல் பாகத்தில் ஆசிரியர் – மாணவன் இடையேயான உறவை சொன்னது போல இந்தப் பாகத்தில் தந்தை – மகன் இடையேயான உறவை சொல்லவிருக்கிறேன். இந்தப் படத்தில் நடிப்பதற்கு நடிக – நடிகையரைத் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தம்பி ராமையா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தில் அவரின் கதாபாத்திரம் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார்.