அந்த நிமிடம் திரைப்படத்தின் ஆடியோ,மற்றும் டிரைலர்வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
இவ்விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன் மனோஜ்குமார்,ஜி.வெங்கடேஷ்,இளன்,ஜாகுவார் தங்கம்,பேரரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.இவர்களுடன் காமெடி நடிகர் கூல் சுரேசும்கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கூலசுரேஷ்பேசியதாவது, எல்லோரும் டி .ராஜேந்தரை எந்த நிகழ்ச்சியில் சந்தித்து பேசினாலும்,சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று தான் அனைவரும் கேட்கின்றனர்.
தயவு செய்து இனிமேல் இப்படியொரு கேள்வியை அவரிடம் இனிமேல் கேட்காதீர்கள்.”சிம்புக்கு விரைவில் திருமணம்நடக்கப்போகிறது. பொண்ணு யாரு? எப்ப கல்யாணம்னு எனக்கு தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம்,விரைவில் அறிவிக்கப்படும் ” என பேசினார்.