சென்னையில் நேற்று மாலை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் ‘அந்தநிமிடம்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டுவிழா நடந்தது.
இவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது, ‘நான் இன்றைக்கு 70 படங்களை இயக்கியிருக்கிறேன். எனக்கு என்ன பெயர் தெரியுமா மினிமம் கியாரண்டி இயக்குனர்.
ஆகவே, தயாரிப்பாளர் இல்லாமல் நாம் இல்லை .தயாரிப்பாளர்கள்தான் வேர்.அந்த வேருக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாக்கும் பொறுப்பு இயக்குநர்களாகிய நமக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
என் வேலையே இப்போது வாழ்த்துவது தான்.எங்கே போனாலும் யாரையாவது திட்டிகிட்டு இருக்கணும், ஒளிஞ்சு போகணும் அழிஞ்சிபோகணும், அவன் வரவேண்டாம், இவன் வரவேண்டாம் என்று நெகட்டிவ்வை நோக்கி உலகம் போய் கொண்டிருக்கிறது.
எதிர்மறையான வாழ்க்கை நடந்து கொண்டிருப்பதால் தான் மனதுக்கு நிம்மதியே இல்லை. நீ நல்லாயிரு, நல்லாயிரு என வாழ்த்திக் கொண்டிரு, உன் வாழ்க்கை நிச்சயம் நல்லாயிருக்கும்.மனசு நிம்மதியா இருக்கும்.
நான் படுத்தா தூங்கிருவேன் சார்,ரஜினிகாந்த் ஷூட்டிங்ல கொஞ்சம் நேரம் கிடைச்சா போதும், முத்துராமன் சார்ம்பாரு,நானும், ..ம் என சொல்லிவிடுவேன் அங்கே கிடக்கிற சோபாவில் அப்படியே படுத்துக் கொள்வார். அடுத்த ஐந்தாவது நிமிஷம் நல்லா தூங்கிடுவார்.
ஏன்னா,மனசில ஒண்ணுமே இல்லை சந்தோசமா இருக்கனும் எல்லோரையும் வாழ்த்திகிட்டே இருக்கனும்.ஒழிகன்னு யாரையும் நாங்க சொன்னதில்லை வாடா,போடான்னு சொன்னதில்லை. அவன் உருப்படமாட்டான், சொன்னதில்லை.வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்னு சொல்லிகிட்டே இருக்கிறோம்.
நாங்க வாழ்ந்துகிட்டு இருக்கோம்.எங்களை உதாரணமா எடுத்துக்கோங்க நீங்களு ம் எல்லோரையும் வாழ்த்துங்க, வாழ்க்கை இனிதாக இருக்கும்,எப்ப பாரு அவன் வரவேண்டாம்இவன் வரவேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க .அப்ப யாரு சார் வருவா?
இங்கே பேசிய இயக்குனர் பேரரசு,மூணு பெரிய படங்கள் வெளியாவதில் இருந்த சிக்கலை குறிப்பிட்டு, சினிமா அழிஞ்சு போயிருமோன்னு பயமா இருக்கு .அதை நாமே அழிச்சுருவோமோன்னு கவலையா இருக்குன்னாரு.தமிழ்ச்சினிமா இப்ப, ‘ஐசியூ’வில் இருக்கு.
அப்படி ஐசியூவில் உள்ள சினிமாவை நாம தான் எல்லோரும் ஒத்துமையா இருந்து காப்பாத்தணும்.பிரச்சனை என்னன்னு நாமெக்கெ ல்லாம் தெரியும்.
அதை எப்படி தீர்க்கணும்னும் தெரியும் எல்லோரும் கூடி அமர்ந்து பேசி நமக்குள்ளேயே தீர்த்து கொள்ளவேண்டும்.
அப்பத்தான் சினிமாவை நம்மால் காப்பாற்றமுடியும் என்பதை உங்கள் சொல்லிக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.