இன்னமும் கோச்சடையான் விவகாரம் முடியலிங்க.
கோச்சடையான் பட விவகாரம் மற்றும் மோசடி தொடர்பாக பெங்களூரு போலீசில் ஆட் பீரோ விளம்பர நிறுவனம் ரஜினியின் மனைவி லதா ரஜினி மீது புகார் கொடுத்திருந்தது.
இந்த மாதம் 6 -ம் தேதியே ஆஜராகும்படி போலீஸ் சொல்லியிருந்தாலும் லதா போகவில்லை. இந்த மாதம் நாலாம்தேதி தான் தனக்கு நோட்டீஸ் கிடைத்தது, பிரயாணம் மேற்கொண்டிருப்பதால் வர இயலாது என பதில் அனுப்பி விட்டார் லதா ரஜினி.
ஆனால் 20-ம் தேதி ஆஜராகி விளக்கம் தர அனுமதிக்க வேண்டும் என கேட்டிருப்பதாக தெரிகிறது.