கார்த்தியின் தமிழ்ப்படங்கள் தெலுங்கிலும் ‘ டப்’ செய்யப்பட்டு வெளியாகி வருவதால் அவருக்கு தமிழ்நாட்டு ரசிகர்களைப்போலவே அதே அளவிற்கு ஆந்திராவிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதன் காரணமாக தற்போது, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனுடன் இணைந்துநடித்து வரும் புதிய .படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் உருவாகி வருகிறது. தெலுங்கில் இப்படத்திற்கு உப்புரி என்றும்,தமிழில் ‘தோழா’ என்றும் வைத்துள்ளனர். ‘தோழா’ என்ற இதே தலைப்பில் சில வருடங்களுக்கு முன்பு, பிரேம்ஜிஅமரன் , விஜய் வசந்த் நடிப்பில் வெளிவந்து தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது, இப்படியிருக்க இந்த தலைப்பையே படக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.