“எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது” என்பது எவர் சொன்ன சொல்லாக இருந்தாலும் சரி ,அது இன்றைய நாட்டு நடப்புக்கு சரியாகவே இருக்கிறது.
கருத்துச்சுதந்திரமும்,பேச்சுச்சுதந்திரமும் ,எழுத்துச் சுதந்திரமும் இன்னமும் இற்றுப் போகவில்லை என்பதைத்தான் மோடி,ராகுல்,மம்தா,கமல் ஆகியோரின் பேச்சுகள் காட்டுகின்றன.
அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பேசுகையில் ஒரு உண்மையைச் சொன்னார்..“மகாத்மா காந்தியை சுட்டவன் நாதுராம் கோட்சே.அவன் ஒரு இந்து தீவிரவாதி” என்பது உலகத்துக்கே தெரியும்.
இதைத்தான் கமல் சொன்னார்:
“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.நாதுராம் கோட்சே.
நான் காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன்.அவர் கொலை செய்யப்பட்டது பற்றி இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.
இது சமரச இந்தியாவாக,சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக இருக்கவேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை.நான் நல்ல இந்தியன் என மார் தட்டிச்சொல்வேன்” என்பதாக பேசி இருக்கிறார்.