மோடியாக திரைப்படத்தில் நடித்திருப்பவர் விவேக் ஓபராய். தீவிரமான பாஜக.ஆதரவாளர்.
கோட்சேயை பற்றி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் பேசியதற்கு தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் ஓபராய்.
“அன்புள்ள கமல் சார்,நீங்கள் சிறந்த கலைஞர் .கலைக்கு எப்படி மதம் கிடையாதோ அதைப்போல தீவிர வாதத்துக்கும் மதம் கிடையாது!!!!கோட்சே தீவிர வாதி என சொல்லலாம். ஏன் இந்து என்கிறீர்கள்? தயவு செய்து நாட்டைப் பிரித்து விடாதீர்கள்!” என்பதாக பதிவு செய்திருக்கிறார்.
காந்தியை கொல்லச்சொன்னது இந்துத்வா தானே! காந்தியை கொன்னவன் ஒரு இந்து தீவிரவாதி என்று சொன்னால் அது எப்படி நாட்டைப்பிரிப்பதாகும்?