விரைவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடக்க இருக்கிறது .நாசர் தலைமையிலான ஒரு அணி நிற்பது உறுதி என சொல்கிறார்கள்.
இந்த அணிக்கு எதிராக நடிகை ராதிகா தலைமையிலான மற்றொரு அணி நிற்கும் என்பதாகவும் சொல்கிறார்கள். இது பற்றி எந்த விதமான அறிவிப்பையும் ராதிகாவோ மற்றவர்களோ அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.
இதைப் பற்றி கேரளாவில் இருக்கிற ராதிகா சரத்குமாரிடம் பேசியபோது தெளிவான பதிலை சொன்னார்.
“எனக்கு இருக்கிற வேலைகளுக்கு மத்தியில் தேர்தலில் நிற்பதற்கு நேரம் இல்லை. திரைப்படம்,சீரியல் வேலைகளுக்கு மத்தியில் நானெப்படி சங்கப்பணிகளை கவனிக்க முடியும்? அதனால் நான் நிற்பதாக இல்லை. எனது கணவர் சரத்குமாரும் நிற்பதாக இல்லை.எங்களுக்கு ஆர்வமும் இல்லை.” என்பதாக கூறினார்.