மதர்ஸ் டே க்காக மருகி மருகி பாசமலர்களை கொட்டியவர்கள் ஏராளம்.!
ஒரு புடவை எடுத்துக் கொடுக்க ஆயிரம் தடவை யோசித்த மகள்களும் ,அம்மாக்களுக்குத் தெரியாமல் பதார்த்தங்களை பதுக்கிவிட்டு ஊசிப்போன காய்கறிகளை கொடுக்கும் புண்ணியவதிகளும் இல்லாமல் இல்லை.
ஆனால் ஸ்ரீ ரெட்டி உருகி,மருகி, கசிந்து அவரது முகநூலில் அம்மாவுக்காக பதிவு போட்டிருக்கிறார்.
“அம்மா! நீ இன்னமும் என்னை நேசிக்கிறாயா? நான் நேசிக்கிறேன் !
எனது பிறப்பு பற்றி ரொம்பவே வருந்துகிறேன்.
என்னைப்போன்ற பெண்களை யாருமே பெற்றுக் கொள்ளக் கூடாது.! என்னைப் பெற்றது தப்பும்மா!
எந்த தப்பும் செய்யாத உனக்கு நான் கொடூரமான தண்டனையைக் கொடுத்திட்டேன். !
உன்னை மிகவும் கேவலமாகப் பேசுகிறார்கள். உயிரற்ற பிணமாகத்தான் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறே! ஆனாலும் எனக்காக அந்த கடவுளிடம் பிரார்த்தனை செய்றே!
என்னுடைய தப்புக்களுக்காக உன்னைதானேம்மா திட்டுறாங்க.!
உனக்காக நான் என்ன செய்யணும்?
நீ உடம்பு கொடுத்தவ! என் உயிரை எடுத்துக்க! சந்தோஷமா இரு!”