தமிழ் மற்றும் இந்தியில் ஒரே சமயத்தில் தயாராகி வரும் ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் மாதவன், சமீபத்தில் குடும்பத்துடன் நியூசிலாந்து நாட்டிற்கு சென்றாராம் . விமானத்தில்( மாதவன் ஒரு பியூர் வெஜிடேரியன்) அவருக்கு வெஜிடேரியன் உணவு வழங்கப்படவில்லையாம். மேலும் மாதவனின் முக்கிய பொருட்கள் அடங்கிய லக்கேஜ் ஒன்றையும் விமான நிறுவனம் தொலைத்துவிட்டதாம். அந்த லக்கேஜ் தற்போது எங்கே உள்ளது என்பது விசாரணை நடந்து வருவதாகவும் கூடிய விரைவில் அது கண்டுபிடிக்கப்படும் என்றும் விமான நிர்வாகிகள்கூறியுள்ளனராம்.இந்த இரண்டு சம்பவங்கள் தன்னை மிகவும் காயப்படுத்தியது என்றும் ,எனினும் நியூசிலாந்து நாட்டின் இயற்கை வளமும், அந்நாட்டு மக்கள் தன்னிடம் காட்டிய அன்பும் தன்னை மெய்சிலிர்க்க வைத்ததாக மாதவன் தன் சமுக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்