அரவக்குறிச்சி அரசியல் அரவம் தீண்டியது மாதிரி நீலம் பூக்கத் தொடங்கி இருக்கிறது.
பாஜக.தலைவர் அஷ்வினி உபாத்தியாயா என்பவர் தேர்தல் கமிஷனில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் கொடுத்திருக்கிறார்.
“நாதுராம் கோட்சேயைப் பற்றி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசியது மதரீதியான உணர்வுகளை தூண்டியிருக்கிறது. முஸ்லீம்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக அப்படி பேசியிருக்கிறார்.அதனால் அவரை 5 நாட்கள் பேச தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு கமல்ஹாசன் “முஸ்லீம்களின் ஓட்டுகளை வாங்க வேண்டும் என்பதற்காக பேசவில்லை. காந்தியின் சிலைக்கு கீழே நின்றுதான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து,நாதுராம் கோட்சே என்பதாக பேசினேன்.இது தப்பில்லை!” என்றார்.
காந்தியின் படுகொலை பற்றி “ஹே ராம்” என்கிற படம் எடுத்தவர்தான் கமல்ஹாசன்.