நடிகர் நடிகையரின் வாழ்க்கையை திரைப் படங்களாக்கும் போது உலகம் வியந்த இந்தியாவின் ஏவுகணை மனிதர் அணு விஞ்ஞானி மறைந்த குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வாழ்க்கையை படமாக்கினால் என்ன?
இந்த யோசனை நமக்கு -தமிழனுக்கு வரவில்லை. வடஇந்தியருக்கு வந்திருக்கிறது.
“இந்தியாவின் முதல் ஹீரோ காந்திஜி. இரண்டாவது ஹீரோ கலாம்.இவரது வாழ்க்கையை படமாக்கப்போகிறோம். முதல் கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. இந்த ஏவுகணை மனிதர் போக்ரான் அணுகுண்டு பரிசோதனையை நடத்தியவர்,அணு ரகசியங்களை பாதுகாத்தவர் ,அவரது பயோபிக்கை படமாக்குவது எங்களுக்கு பெருமை”என்கிறார் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால்.