இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவுமே வரவில்லை.!
எல்லாமே சந்தையில் கேட்ட செய்திகள் மாதிரிதான்.
ஆனால் அந்த செய்திகளிலும் பொன்னியின் செல்வன் கேரக்டர்களுக்காக தேர்வு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிற நடிகர்கள் பற்றிய தகவல்கள் சரியாகவே பொருந்தியது.
கல்கியின் படைப்பில் அமரத்துவமான கேரக்டர்கள் பல இருந்தாலும் வந்தியத் தேவன்,பழுவேட்டரையர் ,குந்தவை,ஆழ்வார்க்கடியன் என்னும் திருமலை கேரக்டர்கள் கல்வெட்டுகள் போன்றவை.
மணியத்தின் ஓவியத்தில் திருமலையின் தொப்பையும் குடுமியும் குள்ளமும் மிகவும் முக்கியமானவை இந்த கேரக்டரில் ஆதி நடிக்கலாம் என தகவல்கள் எழுதப் படுகின்றன.
எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.