மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனின் அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரப் பேச்சு இந்தியா முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியிருக்கிறது.
“காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிர வாதி ” என்று பேசியதற்கு ஆளுக்காள் கமல் மீது எகிறுகிறார்கள்.
பாஜகவை விட்டு விலகிய டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராமும் கமலை காய்ச்சு காய்ச்சு என்று காச்சி விட்டார்.கோடிகளை கொட்டிக்கொடுத்தாலும் இந்த அளவுக்கு கமல்ஹாசனுக்கு விளம்பரம் கிடைத்திருக்காது.
“கமல் போட்டுத் தள்ளுறாரே “என சக நண்பர்களிடம் சூப்பர் ஸ்டார் சொன்னதாக தெரிகிறது.
காயத்ரி ரகுராம் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கலாம்.
“வேறு மதத்தினர் முன்பாக இந்து மதத்தை பேசியது ஏன்?
இந்துக்களுக்கு கமல் தீவிரவாதியா,பயங்கரவாதியா?
அவரது வார்த்தைகள் முட்டாள்த்தனமானது!
கமல்,வீரமணி,ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
ஜெ.ஆட்சியில் இருந்தபோது இப்படி பேசத் துணிவதில்லை.
நீங்களும் ( எடப்பாடி) அதைப்போல செய்ய வேண்டும்!”
இவைகள்தான் டான்சர் காயத்ரிரகுராமின் முக்கிய கோரிக்கைகள்..!