நேத்துவரை சாக்லேட் பாயாக இருந்தவர் மாதவன். இவரது சிரிப்புக்காகவே ஒரு கூட்டம் கிறங்கியது.எம்.ஜி.ஆர்.மாதிரி !
“லவ் யூ”எஸ்.எம்.எஸ் லாம் பறந்தது .இப்ப அதெல்லாம் ஒரு காலம் மாதவா என சொல்லும்படியாகிவிட்டது.
இஸ்ரோ விஞ்ஞானியாக நடிப்பதற்காக தலைக்கு டை அடிக்காமல் வெள்ளை வெளேர் முடி வளர்த்து அந்த பயோபிக்கை முடித்திருக்கிறார் மாதவன்,கிட்டத்தட்ட 2 வருஷம் ஷேவ் பண்ணல.
படம் முடித்து விட்டதால் அவரது ‘முடி’க்கும் முடிவு வந்து விட்டது. தாடி ,மீசையை எடுத்து விட்டு தலைக்கு சாயம் பூசி இளமைக்குத் திரும்பி இருக்கிறார்.இந்த புகைப்படத்தை அம்மாவுக்கு அனுப்பி ஆசிர்வதிக்கும்படி கேட்டிருக்கிறார். இஸ்ரோ விஞ்ஞானியாக நடித்திருக்கும் அவரது படம் வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறது. படவிழாவில் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையுடன் அம்மாவின் ஆசியை வேண்டியிருக்கிறார்.