“எங்கு எதிர்ப்பு இல்லையோ அங்கு வெற்றி இல்லை” என்பார்கள்.
அது மாதிரி ஆகிப்போச்சு. மக்கள் நீதி மய்யத்தலைவர் தலைவர் கமல்ஹாசனின் பள்ளப்பட்டி பரப்புரை. பத்திரிகைகளின் முக்கியச் செய்தியாகிப் போச்சு.
“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே. இந்து,காந்தியை கொன்றவன்”என்று கமல் பேசியதைக் கண்டித்த அதிமுக மந்திரி ராஜேந்திர பாலாஜி “கமலின் நாக்கை அறுக்க வேண்டும் “என்பதாக கூறி இருக்கிறார்.
வழக்கம் போல பாஜகவின் தலைகள் பல “இதான்யா நமக்கு நல்ல வாய்ப்பு .கல்லை வீசுவோம்”என கண்டனங்களை அள்ளி விட்டிருக்கின்றன.
இதற்கு பதில் அளித்துள்ள ம.நீ.மய்ய பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் ” பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதி மொழியை மீறும் வகையில் நடந்து கொண்டதால் ராஜேந்திர பாலாஜியை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும்”என்று கூறி இருக்கிறார்.
“ராஜேந்திர பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும்”என்பதாக விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவேலன் கூறி இருக்கிறார். கமலின் வீடு அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
கைது என்பதெல்லாம் நடக்கிற காரியமா?