எல்.கே.ஜி. படத்தை தொடர்ந்து மீண்டும் பிஸியான நடிகையாக மாறிய பிரியாஆனந்த் தற்போது,சியான் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது தவிர இன்னொரு பெரிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளாராம்.இந்நிலையில்
ரமலான் நோன்பு இருப்பதாக சொன்னாலும் சொன்னார். அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டதாகவும் அம் மதத்தை சேர்ந்த இளைஞரை நிக்காஹ் செய்ய உள்ளதாகவும் சமூக வலைதளங்கள் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பிரியா அனந்திடம் கேட்டபோது, “ஆளாளுக்கு மதம் மாறிட்டீ ங்களான்னு என்னை உண்டு இல்லைன்னு பண்ணிட்டாங்க, போதா குறைக்கு அமெரிக்காவிலிருந்து அப்பாவும், அம்மாவும் பதறி போய் என்னை அடிக்காத குறை தான் போங்க!அவங்க கிட்ட தெளிவு படுத்துவதற்குள் ஒரு வழியா ஆயிட்டேன்.
நான் இந்து தான். ஆனால் எம்மதமும் சம்மதம் என நினைப்பவள் . ரமலான் நோன்பு இருக்கணும்னு ஆசை. அவ்வளவு தான். இந்த ஆண்டு என்னால் முடிந்தவரை ரமலான் நோன்பை பின்பற்றுவேன் ” என்கிறார் பிரியா ஆனந்த்.