சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை கஸ்தூரி.
சில சர்ச்சையான பதிவுகளால் அவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது.
தற்போதும் அது போன்ற ஒரு பதிவு ஒன்றால் சர்ச்சையில் சிக்கி விட்டார் கஸ்தூரி.
சபரிமலை கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய கூடாது என தடை உள்ளது .
நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அந்த விவகாரம் இன்னும் தீர்க்கப் படாமலேயே இருக்கிறது..
இந்நிலையில், தீட்டு எனக் கூறி தமிழ் சினிமாவிலும் ஒரு பகுதியில் பெண்களை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கஸ்தூரி தற்போது முன்வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில்புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், “சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனெரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் புழங்கலாம், உறங்கலாம், ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட கூடாது …. காரணம் தீட்டாம்!” என காட்டமாகக் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.