எதிர்பார்த்ததுதான்.
மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் மீது மலைப்பிஞ்சோ ,செருப்போ ஏதாவது வீசி கலாட்டா செய்வார்கள் என்பது எதிர்பார்த்ததுதான்!
“இந்து மதம் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மற்றவர்களை துன்புறுத்தவோ,கொலைசெய்யவோ துணிய மாட்டார்கள். அவர்களை இந்து மதம் அனுமதிப்பதில்லை”என்று பிரதமர் மோடி பேசிய பிறகுதான் திருப்பரங்குன்றம் தொகுதியில் செருப்பு வீசப்பட்டிருக்கிறது. போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்து மகா சபாவின் தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே ஜனவரி 30 வது நாளை ‘சவுரிய திவாஸ் என வீர தினமாக கொண்டாடியது,காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளை!.
காந்தியின் படத்தை துப்பாக்கியால் சுட்டதும் அதிலிருந்து ரத்தம் வழிவது மாதிரி செட் அப் பண்ணி இருந்தார்கள் இனிப்பு வழங்கினார்கள்.ஆண்டு தோறும் கொண்டாடுவோம் என்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள். தேசப்பிதா காந்தியடிகளுக்கே இக்கதி என்கிறபோது அவரை சுட்டுக் கொன்றவனுக்காக வரிந்து கட்டிக்கொண்டுவருவது என்ன நியாயம்?
இதற்கு பிரதமர் மோடிஜி என்ன பதில் சொல்வார்?