“குமரனாக இருந்தாலும் பரவாயில்லை.இந்தியன் 2 கிழவன். அந்த வர்மக்கலை பெரியமனுசனைப் போட்டு அங்கிட்டும் இங்கிட்டும் இழுத்த இழுவையில்அவருக்கு இடுப்பு கழண்டு போயிருக்கும்.ஷங்கருக்கும் கை ஓஞ்சு போயிருக்கும்.!
என்னமோ ஒரு வெறி…அந்த தாத்தாவுக்குள் நெறைய சங்கதிகளை போட்டு வெச்சிருப்பார்னு தோணுது.! நாட்டு நடப்பு ஷங்கரை ரொம்பவே வாட்டியிருக்கும் போல. அதான் ஷங்கர் கடுமையா போராடி இருக்கார்.
ங்கொய்யாலே …செம பரேடு வாங்கனும்னு ஃபுல் ஸ்கிரிப்டுடன் ரெடியா இருந்த அவரை பல சோதனைகள் பொரட்டிருக்கு.!
லைகா, ரிலையன்ஸ்,சன் இப்படி மூணு ஜெயண்ட்ஸ் மோதுனதில் இப்ப லைகாவே தயாரிக்க முடிவாகி இருக்கு.
பிக் பாஸ் ஒரு பக்கம்,இந்தியன் மறுபக்கம் ,அரசியல் இன்னொருபக்கம்னு கமல் சித்து விளையாடத் தயாராகிட்டார்னு ஆழ்வார்ப்பேட்டை அடியார்கள் வட்டாரம் செப்புகிறது.