திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா இன்று காலை நடந்தது இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பாடகி சின்மயி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள்சென்னையிலிருந்து விமானம் மூலம் மாதுரி சென்றனர் .
மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த கமல் ரசிகர்கள் எனச் சொல்லப்படும் சிலர், சிவகார்த்திகேயனை திடீரென தாக்க முயன்றனர். சில அடிகள் சிவகார்த்திகேயன் மீது விழுந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போன அவர் வேகமாக ஓடி.காரில் ஏறிச் சென்று தப்பித்தார். இச் சம்பவம் திரையுல கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பதிவு கீழே….!