போபால் பார்லிமென்ட் தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர். பெண் வேட்பாளர்.
இவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டார்கள்.
“நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் கோட்சேயை சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி” என்பதாக சொல்லியிருக்கிறாரே அவருக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?”என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அந்த அம்மையார் சொன்ன பதில்:
“நாதுராம் கோட்சே ஒரு தேஷ்பக்த். தேசபக்தர்..அவரை தீவிரவாதி என்பவர்கள் தங்களை விமர்சித்துக் கொள்ளட்டும் .இதுதான் கமல்ஹாசனுக்கு எனது பதில்” என்பதாக சொல்லியிருக்கிறார்.