கடைசியில் இந்த உலகநாயகனையும் சாய்த்து விட்டது ஜவுளி விளம்பர பட மோகம் !ஆம்,முதன்முறையாக வர்த்தக விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் கமல்ஹாசன் . இதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் நடக்க இருக்கிறது.இதுவரை பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் கேட்டும், எந்த ஒரு விளம்பர படங்களிலும் கமல் இதுவரை நடித்ததில்லை, ஆனால்,சில விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.இந்நிலையில், முதன்முறையாக ஜவுளிக் கடை விளம்பர படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் கமல்ஹாசன். .இந்த விளம்பரப் படத்தை இயக்குனர் விஷ்ணு வர்தனின் தம்பி நடிகர் கிருஷ்ணா இயக்கவிருக்கிறார்.