“காந்தி ஒரு கபடவேடதாரி!ஹிந்துக்களை முஸ்லிம்கள் படுகொலை செய்த பின்னரும் காந்தி மகிழ்ச்சியாக இருந்தார் .அந்த அளவுக்கு அவரது மதச்சார்பின்மை கொடி கட்டிப் பறந்தது” என்று சொன்னவர்தான் நாதுராம் கோட்சே. அவர் இந்துக்களுக்காக நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ‘பவுதிக் கார்யவாஹ்’ அதாவது கொள்கை பரப்புச் செயலாளர் .சாகும் வரை பதவியில் இருந்தவர். “நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?”என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கோபால் கோட்சே நாதுராமின் தம்பி.
அவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ்.சின் தீவிர உறுப்பினர்கள்.
ஆர்.எஸ்.எஸ்.சின் கட்டளைப்படி இயங்குவதுதான் பா.ஜ.க.
“நாதுராம் கோட்சேயைப் பற்றி சென்னை மெரினாவில் பேசியதைத்தான் அரவக்குறிச்சியில் பேசினேன்..அப்போது சும்மா இருந்துவிட்டு அரவக்குறிச்சியில் பேசியதும் பொங்குகிறார்கள் என்றால் தன்னம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று அர்த்தம் “என்கிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.
அதுவும் உண்மைதான்.! ஊரோடுஅணைந்து போகவேண்டிய தீயை நாடு முழுக்க பரவ விட்டவர்கள் பா.ஜ.க.வினர்தான்!
நம்ம கருத்து கஸ்தூரி கரெக்டாகத் தான் சொல்லிருக்கிறார்.
“கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக் கிட்டுருக்கோமே…பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க…. இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா?. 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க !” என்று சொல்லியிருக்கிறார்.
பிரதமர் மோடியும் தலைவர் அமித்ஷாவும் கமலின் பேச்சுக்கு காது கொடுத்திருப்பதே கமல்ஹாசனின் பேச்சு வீரியம் உள்ளதுதான் என்பதை காட்டிவிட்டது.?
கமல்ஹாசன் என்ன சொல்கிறார்?
“நான் பேசினதில தப்பே இல்லிங்க. பல்லாண்டுகளாக பேசப்படுறதுதான்.! மோடிக்கு நான் பதில் சொல்லத் தேவையில்ல.அவருக்கு அபாரமான ஞானம் இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவருக்கு சரித்திரமும் சரித்திர ஆசிரியர்களும் பதில் சொல்வார்கள்.
என்னை கைது செய்வார்கள்னு சொல்றாங்க. நான் பயப்படல .
அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்கு! “என்கிறார் கமல்ஹாசன்!