தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முக்கியமான ,மிரட்டலான மனிதர் ஒருவர் என்றால் ஜே.கே.ரித்தீஷையே கை காட்டுவார்கள். அந்த அளவுக்கு செல்வாக்கான ஆள். டிராபிக் கான்ஸ்டபிளுக்கு ஐநூறு ரூபாயை ஆனாசயமாக கொடுத்து விட்டுத்தான் தோஷி கார்டனை ( வடபழனி பஸ் நிலையம் எதிரில்.)விட்டு வெளியேறுவார்.பணத்தை பணம் எனப் பாராமல் அள்ளி அள்ளிக் கொடுத்தவர்.
இவரது மனைவி ஜோதீஸ்வரி மீது ரித்தீஷிடம் வேலை பார்த்து வந்த கேசவன் புகார் கொடுத்திருக்கிறார்.
“பத்தாண்டுகளுக்கு மேலாக ரித்தீஷ் கொடுத்த வீட்டில்தான் வாடகை இல்லாமல் குடி இருந்து வந்தேன்.தற்போது நாலு லட்சம் ரூபாயைக் கொடுத்து விட்டு காலி செய்யும்படி மிரட்டுகிறார்.எனக்கு பயமாக இருக்கிறது. மேலும் சிலர் பயமுறுத்துகிறார்கள்” என்பதாக புகார் கொடுத்திருக்கிறார்.