நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றை ‘பாபநாசம்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார்.
இதில், முதன் முறையாக ஜோதிகா கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.ஜோதிகா,கார்த்தி இருவரும் அக்கா தம்பியாக நடிக்கும் இப் படத்தில் சத்யராஜ் இவர்களுக்கு தந்தையாக நடித்து வருகிறார்.
இப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ‘கிடாரி’, ‘வெற்றிவேல்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிகிலா விமல் இப்படத்தில் இணைந்துள்ளார்.
இது குறித்த தகவலை நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
. @Nikhilavimal1 joins us in Ooty today.
Welcome to the team 🙂#Jyotika #Sathyaraj #JeetuJoseph #GovindVasantha @rdrajasekar @praseesujit @Viacom18Studios pic.twitter.com/KiUg7NzddA— Actor Karthi (@Karthi_Offl) May 17, 2019