அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் பெரு நாவல் தமிழுக்குக் கிடைத்திருக்கிற வைர கிரீடம் ஆகும். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், உலகநாயகன் கமல்ஹாசன் இன்னும் பல பிரபலங்கள் முயன்றும் ஸ்டுடியோ தளத்துக்கே வர இயலாமல் போய்விட்டது.
தற்போது இயக்குநர் மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார் .நம்பிக்கை வருகிறது. இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாக அன்றாடம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
தற்போது முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயும் கமிட் ஆகியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்
பொன்னியின் செல்வனில் நந்தினி கேரக்டர் முக்கியமானது .வில்லத்தனமானது.இந்த கேரக்டரில்தான் ஐஸ் நடிக்கிறாராம்.