கதை இயக்கம்:ஷிவா அரவிந்த்,ஒளிப்பதிவு; யுவா, இசை; தரண்,
கவின்,ராசு,அருண்ராஜா காமராஜ் ,இளவரசு, அழகம் பெருமாள், மன்சூரலிகான்,ரம்யா நம்பீசன்,
________________________________________
பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சிக்கு பாக்யராஜ் வந்திருக்கிறாரே ….அவருக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என யோசித்தப் பார்த்ததில் “கதைதான் சம்பந்தம்” என்பது புரிந்தது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா கதை திருட்டு விவகாரம் இன்னமும் முடியவில்லை என்றே சொல்கிறார்கள். முகிலன் காணாமல் போன மர்மம் மாதிரி லட்டு கதையும் இருக்கிறது. சரி விடுங்க. அது தனிக்கதை.
ஒரு பெண்ணை மூன்று பேர் காதலிக்கிறார்கள். கடைசியில் பெண்ணை யார் தட்டிக்கொண்டு போகிறார்கள் என்பதுதான் கதை. அது எப்படி வந்திருக்கிறது என்பதை பார்க்கிற ஆர்வம் மூலவர் பாக்யராஜ்க்கு வந்திருக்கலாம் அல்லவா!
இடைவேளை வரை நெளிய வைத்து விட்டு அதற்கு பின்னர் கதையில் போதிய காமடி நிறைவாக இருப்பதால் சில நடிகர்களின் பலவீனங்கள் மறைந்து விடுகின்றன. திரைக்கதை அமைப்பதிலும் பாக்யராஜின் உதவி இருந்திருக்கும் எனத் தெரிகிறது.
மூவரில் அருண்ராஜா காமராஜ் காப்பாற்றுகிறார். கவின்,ராசு இருவரும் இன்னும் கற்றுக்கொள்ளவேண்டும்.இயக்குனரின் காட்சி அமைப்புகளால் இருவரும் காப்பாற்றப்படுகிறார்கள் என்றே சொல்லலாம்.யதார்த்தமான வசனங்கள், நம்பீசன் கவுரவத் தோற்றம் மாதிரி! ஏனோ ஒட்டவில்லை.
கோடையில் சாரல் பெய்தாலும் சுகமே என்கிற நினைவுதான் படத்தைப் பார்த்ததும் வந்தது.
சினிமா முரசத்தின் மார்க்ஸ் 2.5/5