சென்சாரால் தடை செய்யப்பட்ட வசனங்கள் லீக் ஆகி இருக்கிறது.!
அதுவும் இரு மதங்கள் தொடர்பான வசனங்கள்.!
கீதை- குரான் இரு புனித நூல்களிலும் சொல்லப்பட்ட வாசகங்கள் அவை.
இந்தியாவில் தீவிரமாக தேடப்பட்ட பயங்கரவாதி யாசின் .
ஜெர்மன் பேக்கரி,புனே வெடி குண்டு,வெடிப்பு,பெங்களூரு தொடர் வெடிகுண்டு வெடிப்பு என பல பயக்ங்கரவாத செயல்களுக்கு யாசின்தான் மூளை என சொல்லப்பட்டது அந்த தீவிரவாதியை வேட்டையாடியவராக நடிகர் அர்ஜுன் கபூர்,நடிக்கிற படத்தில் கீதை,குரான் இரண்டிலும் இருந்து சில வசனங்கள் எடுத்தாளப்பட்டிருந்தன.
ஆனால் அவை மத உணர்வுகளை தூண்டுவதாகிவிடும் என சொல்லி அந்த முன்னோட்டச்சுருளை மத்திய தணிக்கைக் குழு தடை செய்து விட்டது.
ஆனால் அந்த புரமோஷன் படம் லீக் ஆகிவிட்டது.