ரமலான் நாளில் வெளிவருகிற படம் ‘பாரத்’
.இந்த படத்தில் முதலில் நடிக்க வந்தவர்தான் பிரியங்கா சோப்ரா.
இடையில் என்ன நடந்ததோ அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
“நான் நடிக்க வில்லை” என்று வெளிநடப்பு செய்து விட்டார் பிரியங்கா.
“மகளே ,நீ இல்லேன்னா வேற ஆளா கிடைக்காது ” என்று தனது பிரியமான தோழி கத்ரினா கைப்பை நடிக்க வைத்து விட்டு படத்தை முடித்து விட்டார்.
பொதுவாக படம் முடிந்து அதன் புரமோஷன் வேலைகளின் போது தான் சில உண்மைகள் வெளியில் வரும்.
சிலர் டைரக்டா குத்துவார்கள் .சல்மான் பொடி வைத்து குத்துவார்.
” பிரியங்கா..உனக்கு ரொம்பவும் தாங்க்ஸ் கண்ணு. எவ்வளவு பெரிய தியாகம் பண்ணிருக்கே! கத்ரினா கைப் லைப்லேயே இவ்வளவு சிறந்த கேரக்டரை பார்த்திருக்க மாட்டார். அவருக்கு மிக சிறந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்திட்டியே! கத்ரினாவுக்கு இந்த படம் நேஷனல் அவார்டு வாங்கிக் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்ல.அதனால கத்ரினா சார்பிலும் உனக்கு தாங்க்ஸ் !“என நக்கலாக குத்து விட்டிருக்கிறார்.
சல்மான் தன்னுடைய அலைவரிசைக்கு ஒத்து வராதவர்களை கழற்றி விடவும் கடுமையாக நக்கல் பண்ணவும் தயங்காத ஆள்.!