மாநாடு நடத்துவது என்றால் லேசுப்பட்ட காரியம் இல்லை. அரசியல் கட்சிகள் இடம் தேடி அலைந்து பந்தல்கால் நடுவதற்கு படாதபாடு படுவது மாதிரி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் படாத பாடுபட்டு ஜூனில் தொடக்கவிழாவை நடத்தி விடுவார் என்கிறார்கள்.
எஸ்.டி.ஆர்.இந்த படத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ்,உடம்பு குறைத்தல் என வெளிநாடுகளில் தீவிரமாக இருக்கிறார். கவுதம் கார்த்திக்குடன் ஒரு படம், முன்னாள் காதலி ஹன்சிகா நடிக்கும் படத்தில் சின்ன ரோலிலும் நடிக்க இருக்கிறார். மாநாடு படத்தில் இவரது ஜோடி கல்யாணி இயக்கம் வெங்கட்பிரபு. அண்ணனின் இயக்கம் என்கிறபோது தம்பி இல்லாமலா? பிரேம்ஜியும் இருக்கிறார்.