‘புலி’ திரைப்படம் குழந்தைகள் விரும்பி பார்க்கும் ஃபேண்டஸி படம் என்பதால்அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒருசில திரையரங்குகளில் மட்டும் இந்த படத்தை 3Dயில்அதாவது முப்பரிமாணத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் 3D பிரிண்ட் போட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அரசர் காலத்து பிரமாண்ட அரண்மனை, அதிர வைக்கும் வாள் சண்டைக்காட்சிகள் ஆகியவைகளை 3Dயில் பார்க்கும் போது குழந்தைகள் குதூகலத்துடன் மீண்டும் மீண்டும் திரையரங்குக்கு வரலாம் என்பதே தயாரிப்பு நிறுவனத்தின் கணிப்பாம்!