மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் நடித்தவர் அதிதி ஹயாத்ரி ராவ்,
பதினேழு வயதில் நடிகர் சத்யதீப் ராவ் என்பவரை காதலித்தார் .அந்த காதல் 21 வயதில் திருமணத்தில் முடிந்தது. அடுத்த இரண்டு ஆண்டிலேயே பிரிவும் வந்து விட்டது.
பாலிவுட்,டோலிவுட்,கோலிவுட்,மல்லுவுட் என நான்கு சினிமா உலகிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஹைதராபாத்தில்தான் வாழ்க்கை.
எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர்.
இவருக்கு முதல் காதல் கடிதம் யார் எழுதியது?
சிரிக்கிறார்.
“பிப்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறபோது காதல் கடிதம் வந்தது. நீண்ட கடிதம்.2 பக்கம் இருந்தது. அப்ப எனக்கு ஒன்பது வயசு இருக்கும்னு நினைக்கிறேன். ரொம்பவும் அழகா இருப்பேன். கொழுக் மொளுக்னு உடம்பு இருக்கும்.அப்பவே அப்படி! அம்மாகிட்ட அந்த லவ் லெட்டரை காட்டினேன். அடுத்தது போர்டிங் ஸ்கூல்தான்,!”
“டேட்டிங் அனுபவம் எப்படி?”
“கல்யாணம் பண்ணினேன்.பிரிவு அனுபவம் ஏற்பட்டுச்சு. ஆனா இன்னிக்கி வரை எனக்கு அந்த டேட்டிங் பற்றி எதுவும் தெரியாது.”என்று சிரிக்கிறார்