“மோடியின் குகை தியானம்,சர்வ வசதிகளுடன்” என முரசத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
அதைப் படித்த கங்கை அமரன் இன்று காலை தொலைபேசியில் வந்தார்.
“அண்ணே…. செய்தி படிச்சேன். அந்த குகையில் எந்த வசதியும் கிடையாது. என்னை அந்த குகையில் தியானம் பண்ண அனுப்பிவைத்ததே ரஜினி சார்தான்!”
“நல்ல அனுபவம் அமர். ரஜினி அடிக்கடி அந்த குகைக்குத்தான் போவாரா?”
“ஆமா! தியானம் பண்றது தெய்வீக அனுபவம். இன்னிக்கும் நான் அதிகாலை நாலு மணிக்கு எந்திரிச்சு தியானம் பண்றேன். ரஜினிசாரும் தினமும் தியானம் பண்ணாம எந்த வேலையும் செய்றதில்ல. நான் அந்த குகையில் ஒன்னரை மணி நேரம் தியானம் பண்ணிருக்கேன். ரஜினி சார் ஆச்சரியப்பட்டு “என்ன சாமி அவ்வளவு நேரம் தியானத்தில் இருந்திங்களான்னு “கேட்பார்.அந்த குகைக்குள் எந்த வசதியும் கிடையாது..வெளியில் அந்த ஆபிசில் போன் இருக்கு. குகைக்குள் அப்படி எதுவும் இல்லேன்னு சொல்ல தோணுச்சு .அதான் சொன்னேன்.
அப்புறம் அவர் அந்த குகைக்கு போனதில் விதி மீறல் எதுவும் இல்ல. சாமி கும்பிடுறது தப்பா? அவர் தேர்தல் முடிஞ்ச பிறகுதான் போயிருக்கார்.சிலஊடகங்களின் பார்வை தப்பாவே இருக்கு” என்கிற தனது மனக்குறையையும் சொன்னார் கங்கை அமரன்.