விளையாட்டாக சொல்வதைப்போல அதில் வினையையும் விதைப்பதில் கில்லாடி விவேக் ஒபராய்!
ஐஸ்வர்யாராயின் அந்தக்காலத்து சிநேகிதர்.நட்புப் பட்டியலில் சல்மானும் உண்டு.இதை யாரும் மறைத்ததில்லை. குறிப்பாக சொல்வதென்றால் பச்சன் குடும்பத்துக்கும் தெரியும்.
நடைபெற்ற தேர்தலை வைத்து ‘மீம் ‘போடுவதைப் போல ஐஸ்வர்யாராயை அவமானப்படுத்தியிருக்கிறார் விவேக் ஒபராய். மோடி வேஷம் போடுவதற்கு சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஒப்பினியன் போல் அதாவது கருத்துக் கணிப்பு கட்டத்தில் ஐஸ்-சல்மான் படம், எக்சிட் போல் கட்டத்துக்கு விவேக் ஓபராய் படம் ,ரிசல்ட் கட்டத்துக்கு அபிசேக்,ஐஸ்,குழந்தை படம் போட்டிருந்தார்.சும்மா கிடக்கும் சல்மானையும் கோர்த்து விட்டிருக்கிறார்.
இதற்கு சோனம் கபூர் கடுமையான கண்டனத்தை உடனே பதிவு செய்து இருக்கிறார்.