வடக்கு,கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியைப் பொருத்துதான் மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள்.
அது சாத்தியம்தான் என்கிறார்கள்.!
தென்னகத்தை பொருத்த மட்டும் பாஜக.வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
தமிழ்நாடு: 39
ஆந்திரா: 25
தெலங்கானா : 17
கருநாடகம்:28
கேரளா :20
129
ஆக மொத்தம் உள்ள 129 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
ஆந்திராவில் ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறார்கள். தெலங்கானாவில் 1 இடம் கிடைக்கலாமாம்.
கர்நாடகாவில் மட்டும் 15 இடங்கள் வரை பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு 5 இடம் வரை கிடைக்கலாம்.
சரி கேரளத்தில் எத்தனை இடம் எதிர்பார்க்கலாம்.?
அந்த அய்யப்பன் மனம் இருக்குமேயானால் ஒரு இடம் கிடைக்கலாம்..
ஆக மொத்தம் தென்னிந்தியாவில் 22 சீட்டு வரை எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் பா.ஜ.க.வுக்கு பிற மாநிலங்களில் 250 க்கு அதிகமான இடங்கள் கிடைத்தாக வேண்டும்.அதாவது வடக்கு,கிழக்கு மாநிலங்களில்.!
உ.பி, ஓடிஸா,மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
பார்ப்போம் 23-ம் நாள் அன்று!