காஞ்சனா இந்தி ரீமேக் படமான லட்சுமி பாம் படத்தை டைரக்ட் பண்ணப்போவதில்லை .அதிலிருந்து வெளியேறி விட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
கதை அவருடையது, அதை அவர்களுக்கு தருவதற்கு தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் நடிகர் அக்ஷய் குமார் இந்த படத்தை லாரன்ஸ் மாஸ்டர் இயக்குவதையே விரும்புவதால் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
லாரன்ஸ் என்ன சொல்கிறார்?
“படத்தின் முதல் போஸ்டர் என்பது ஒவ்வொரு டைரக்டருக்கும் கனவு மாதிரி.!அவர்கள் மனதில் எவ்வளவோ கற்பனைகள் இருந்திருக்கும்.பர்ஸ்ட் லுக் முக்கியம்.
அவர்கள் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் கார்ட்டூன் மாதிரி இருக்கு. பிரச்னைகள் பற்றி தயாரிப்பாளருடன் எனது லாயர் பேசிக்கொள்வார்” என்று சொன்னார்.
அக்ஷய் குமார்,கியாரா அத்வானி,ஆர்.மாதவன் ஆகியோர் நடிப்பதாக இருக்கிறது.
மாஸ்டர் சமாதானமாகி இந்தியை இயக்கப்போவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.