இழுத்துக்கோ பிடிச்சுக்கோன்னு ரொம்ப வருசமா தண்ணி காட்டிட்டு இருந்த இம்சை அரசனுக்கு ஒரு முடிவு வந்திருக்கு போல.! வடிவேலு ஒத்துவந்ததாக கேள்வி. நல்லது நடந்தா சரி!
அதுக்கு முன்னாடி டைரக்டர் சிம்புதேவன் ஒரு வித்தியாசமான முயற்சியில் எறங்கி இருக்கார். நேத்து நைட் என்.ஜி.கே.நாயகன் சூர்யா இவருடைய படத்தின் பெயரை அறிவிச்சார்.
நல்ல தமிழ்ப் பேரு! ‘கசட தபற ‘
ஏட்டுப் பள்ளிக்கூடத்தில படிக்கிறப்ப சட்டாம்பிள்ளை நல்ல சவுண்டா கத்தச்சொல்வார் ‘கசட தபற வல்லினமாம்’ னு!
நல்லா ஞாபகம் இருக்கு !
இந்த காலத்தில அப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கிறாங்களான்னு தெரியல. இப்ப சிம்புதேவன். படத்துக்குப் பேர் வெச்சிருக்காரு. ஒரே கதை ஆறு பாகம். ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு எடிட்டர். இதே மாதிரி கேமராமேன்,மியூசிக் டைரக்டர்னு ஆறாறு பேர் இருந்தா புதுமையா இருக்கும்ல. யோசிங்கப்பா!
தயாரிப்பாளர் பிளாக் டிக்கெட் வெங்கட் பிரபு. ஆர்ட்டிஸ்ட் யார் யாருன்னா ஜெய்,சந்திப் கிஷன்,ஹரிஷ் கல்யான், ரெஜினா,பிரியா பவானி சங்கர்,இன்னும் ஆளு பேரு இருக்காங்க.
இந்த படத்த முடிச்சிட்டுத்தான் இம்சை அரசன் புலிகேசியை கையில எடுக்கிறாரு. தம்பி வடிவேலு சரிப்பட்டு வந்திட்டார்னு நினைக்கிறேன். நல்லது நடந்தா சரிப்பா.!