பிரசன்னா,,,அழகம்பெருமாள்…!
எத்தகைய இமேஜ்களில் இருந்தவர்கள். இவர்களின் திரை உலக குரு,வழிகாட்டி,ஆலோசகர்கள்..என இதர பல வெங்காயங்களை எண்ணிப்பாருங்கள்.! எத்தகைய குழிக்குள் விழுந்திருக்கிறார்கள்.!
“நாளைய சினிமா இப்படித்தான் இருக்கும். கெட்ட வார்த்தைகளில் நனைந்து ,ஊறிப்போன வார்த்தைகளை மென்று விழுங்கத்தான் வேண்டும்.!
உண்மைதான்! மறுக்கவில்லை.
வெப் சினிமாவில் மட்டும்தானா கெட்ட வார்த்தைகள் கொட்டிக்கிடக்கின்றன..பெரிய திரையில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் பேசவில்லையா…
சினிமாவை நம்பி வாழவேண்டியவர்கள் நாளைய சினிமாவில் பேசித்தான் ஆகவேண்டும்.தவிர்க்க முடியாது.
ஏன் எனில் ,
நாம் வட இந்திய கலாசாரத்துக்கு அடிமைகளாகி விட்டோம். மேலை நாட்டு கலாசாரத்துக்கு வட இந்திய கலாசாரம் விலை போய் விட்டது.
சுதந்திர இந்தியாவில் கவுரவம் மிக்க அடிமைகள் நாம்!அதனால் நாமும் நமது பிள்ளைகளும் கெட்ட வார்த்தைகளுக்கு சகஜமாகி விடவேண்டும்.
இப்ப மட்டும் என்ன வாழுதாம் என்பவர்களைப் பற்றி கவலை இல்லை.
அதாவது வெப் சீரியல்களை செல்போனில் பார்க்கும் காலம் இது.
ஜி 5 வழியாக சில சீரியல்கள். திரவம் என்கிற தொடரில் பிரசன்னா, அழகம் பெருமாள் ஆகிய பெரியகுடும்பத்துப் பிள்ளைகள் நடித்திருக்கிறார்கள்.
மூலிகை பெட்ரோலைப் பற்றிய கதை. முன்னோட்டத்தைப் பார்க்கிறபோது மோடியின் சாயலில் ஒருவர் டிரம்பின் சாயலில் ஒருவர் இப்படி பல கதாபாத்திரங்கள் .அவர்களில் .அழகம்பெருமாள் ஒரு எம்.எல்.ஏ. “ம்மாலே!”
இவர் குமரி மாவட்டத்தின் பெருமை!
பிளட்பிரசர் எம்.எல்.ஏ.என வைத்துக்கொள்ளலாம். கோபப்பட்டால் வண்டை வண்டையாகத்தான் வரும். ….ழுத்தி என்று ஒருவர் பேசுவார்.அவர் வாயில் அப்படி வராவிட்டால்தான் ஆச்சரியம்.அவர் ஜான் விஜய். தி.மு.க.பிரமுகரின் மருமகன்.
ஆனால் அழகம் பெருமாள்? மணிரத்னம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
பிரசன்னா மூலிகை விஞ்ஞானியாக வருவார். கண்ணாடி போட்டுக்கொண்டு ஆவி பிடிக்கும் விஞ்ஞானி! முதிர்ந்த நடிப்பு. அவரது தகுதிக்கு ஆபாச வசனங்கள் பேச மாட்டார் என நம்புவோம்.
தணிக்கை என்கிற கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்து விட்டவர்களை சுதந்திரமாக விட்டால் இப்படித்தான் ஆகும். ஆக சுய கட்டுப்பாடு என்பது அவசியம்.ஆனால் இது நடக்காது என்பதை ஆட்டோ சங்கர் வெப் சீரியலில் பார்த்தாகி விட்டது.
பெண்களை டிவி.சீரியல்கள் கெடுத்து விட்டது. வெப் சீரியல்கள் குட்டிப்பசங்களையும் கெடுக்கப்போகிறது.
–தேவிமணி.